ஹிஸ்புல்லாவை போல கொள்கையில்லாது சலுகைக்காகவும் அமைச்சு பதவிக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவுபவன் நான் அல்ல. நான் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிவிட்டு கட்சி தாவாத கொள்கைவாதி’ என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
தேர்தலுக்காக மேடைகளில் பொய்த் தகவல்களை கூறுவது சிறந்ததல்ல. அரியநேத்திரன் எம்.பி புலிகளை விட கூடிய பயங்கரவாதி எனவும் அவர் பெரிய புலி எனவும் ஹிஷ்புல்லா கூறியுள்ளார். நான் அவருக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் புலி அல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் கட்சிவிட்டு கட்சிதாவாத கொள்கைவாதி’ என்று பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளைக் காரியாலயமொன்று பழுகாமத்தில் வேட்பாளர் வெள்ளிமலை தலைமையில் திறந்து வைக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இனம் நசுக்கப்படும் போது குரல் கொடுக்கும் அரசியல்வாதி நான். நான் இறந்தால் என்னைப் போல் இன்னுமொருவன் இம்மண்ணில் பிறப்பான் என்பதை ஹிஷ்புல்லா புரிந்துகொள்ள வேண்டும். பிரதியமைச்சர் ஹிஷ்புல்லா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவர் என தெரிவித்திருக்கின்ற நிலையிலும், முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சர் என தெரிவித்திருக்கின்ற நிலையிலும் எவ்வாறு தமிழ் வேட்பாளர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராக வரமுடியும்? என்றார்.
No comments:
Post a Comment