Translate

Thursday 30 August 2012

'சூரியன் மேற்கே உதித்தாலும் இனி திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’


தருமபுரி: கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி திமுக, அதிமுகவுடன்   கூட்டணி சேர மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்   தெரிவித்துள்ளார். 


தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர்  அலுவலகங்கள் முன்பாக செப்டம்பர் 17-ம் தேதி பாமக சார்பில் நடைபெறவுள்ள  தனி   இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் குறித்த விளக்கப் பொதுக் கூட்டம்  தருமபுரியில்   நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில்   இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருவது பாமக மட்டுமே.

1989-ம் ஆண்டு தொடங்கி 1996-ம் ஆண்டு வரை தனித்துப் போட்டியிட்டு வந்த   பாமக, 1996-க்கு பிறகு பாதை மாறியது. பயணம் மாறியது.திசை மாறியது.   ஆனால், கொள்கை மட்டும் மாறவில்லை.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி திமுக, அதிமுகவுடன் கூட்டணி   சேர மாட்டோம்.தமிழகத்தில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்.


பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகிவிடும்   என்கின்றனர்.இப்போதும்,கள்ளச்சாராயம்,பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெறுகிறது.

வன்னியர்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு கோரி செப்டம்பர் 17-ம் தேதி மாநிலம்   தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.இதன் மூலம் வட தமிழ்நாடு குலுங்கும்”என்றார். 

No comments:

Post a Comment