Translate

Wednesday 29 August 2012

ஏழு ஈழத் தமிழர்களை அரசு விடுதலை செய்துள்ளது.நிரந்தர தீர்வு எட்டும் வரை செந்தூரனின் போராட்டம் தொடரும் என செந்தூரன் அறிவித்துள்ளார் .


செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் செந்தூரன் செய்த உண்ணா நிலை போராட்டம் , நாம் தமிழர் , மதிமுக செய்த முற்றுகை போராட்டம் , நாம் அரசுக்கு கொடுத்த அழுந்தங்கள் , ஊடகங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள தோழர்கள் ஏழு பேர்களை அரசு விடுதலை செய்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு.. சேகர், சதீஸ்குமார், சிவா , பிசி முகமது , குட்டி, பராபரன் மற்றும் ஒருவயோதிகர் சண்முக நாதன் ஆகியவர்கள்.இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மேலும் நான்கு தமிழர்கள் அருள் குலசிங்கம், செல்வராஜ் , சதாசிவம் மற்றும் வேந்தன் ஆகியோர் தங்கள் பட்டினிப் போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர்.எனினும் நிரந்தர தீர்வு எட்டும் வரை செந்தூரனின் போராட்டம் தொடரும் என செந்தூரன் அறிவித்துள்ளார் .

No comments:

Post a Comment