Translate

Wednesday 29 August 2012

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிவில் அதிகாரிகள் - வடக்கு, கிழக்கில் மட்டும் உயரதிகாரிகளாக படையதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? - கேள்வி எழுப்பினார் ஹக்கீம்!

Posted Imageநாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழைச்சேனையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரகார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். வாழைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத்இ சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.
வேட்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மீராமுஹதின் ஹாஜியார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அமைப்பாளர் ஹீசைன் தலைமை தாங்கினார். பெருந்திரளான மக்கள் பங்குபற்றிய இப்பிரசாரக் கூட்டத்தில் மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.
முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment