Translate

Wednesday 29 August 2012

வடபகுதியின் கரைஓரபகுதியினை கையகப்படுத்தும் நோக்கில் சிங்களகுடியேற்றங்கள்!

தமிழ் மக்களின் இருப்பினை இல்லாமல் செய்வதற்கே வடமாகானத்தில் உள்ள தமிழர்களுடைய நிலங்கள்அபகரிக்கப்படுகின்றது. தமிழ் தரப்புகள் ஒன்றினைந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வளசுறண்டல்களுக்கும், நில அபகரிப்பிற்கும் எதிராக போராட வேண்டும இல்லைஎன்றால் இன்னும் குறுகிய காலத்திற்குள் தமிழர்களுடைய இருப்பு அழிக்கப்பட்டுவிடும் என்று தமிழ் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.தமிழ் மக்கள் அழியும் போது அவர்களுக்காக குரல் கொடும்கும் சகத்திகளும் மௌனித்துப் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் செய்தியாளர்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.வடமாகாணத்தில் தமிழர்களுடைய முக்கிய வளப்பகுதியாக கரையோரங்களே காணப்படுகின்றது. இவற்றிலும் வடமராட்சிகிழக்கு, முல்லைத்தீவு போன்ற பகுதிகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். கரையோரத்தில் உள்ள மீனவர்களுடைய தொழிலைத் தீர்மானிப்பது தற்போது சிறிலங்கா படையினர்தான்.அனைத்து கடற்றொழில் சங்கங்களும் சிறிலங்கா படையினர் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வேண்டும். குறிப்பான முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் 36 சிங்களக் குடும்பங்கங்ககடற்றொழில் செயவதற்கான அனுமதி பெறப்பட்டு அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போன்று முல்லைத்தீவு முகத்துவாரப் பகுதியில் 300 மேற்பட்ட சிங்களக் கடற்றொழில் குடும்பங்கள்குடியேற்ப்பட்டு அரை நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியேறுவதற்கு 200 குடும்பங்களின் பதிவுகள் மேற்கொள்ள்ப்பட்டுள்ளது.

வடபகுதியில் உள்ள கரையோர வளங்களை கையகப்படுத்துவதற்கு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது. இதனால் தமிழர்கள் தொழில் நிமிர்த்தம் அங்கிருந்து வேறு இடங்களிற்குச் செல்ல வேண்டி இக்கட்டான நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் கொக்கிளாயில் சுமார் 37 ஏக்கர் தமிழர்களுடைய பகுதிகளை சுற்றி இன்மனைட் அகழப்பட்டு வருகின்றது. இதற்கு தொழிற்சாலையும் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் தமிழர்களுடைய வளச்சுரண்டல்களுக்கு ஒன்றினைந்து தமிழ்தரப்புகள் குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழ் மக்களுடைய இருப்பு அழிக்கப்படுவது உறுதி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment