Translate

Thursday, 30 August 2012

மூளையில் இரத்தக் கசிவோடும் மயங்கிக் கிடக்கும் நிலையிலும் கட்டிலோடு சங்கிலியால் கட்டப்பட்டுள்ள சதீஸ்!


இலங்கையில் உள்ள மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க் கைதி சுந்தரம் சதீஸ் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத் தவணையின் பின் திடீர் என காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

மனைவி கவிதா சுரேஸ் அவர்கள் தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி ஜனநாயக மக்கள் முன்ணணித் தலைவர் மனோகணேசனிடம் கேட்டுக் கொண்டதிற்கினங்க மனோகணேசன் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டதற்கினங்க கொழும்பு பெரியவைத்தியசாலை 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்டார்.
கொழும்புக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் அவர்களை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன், ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயல ஜெயவர்த்தன மனைவி மகளுடன் சென்று பார்த்தபோது அவர் தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளின் கொடூரத் தாக்குதலில் குற்றுயிராய்க் கிடக்கிறார் சதீஸ்.தமிழனுக்கு மட்டுமான இந்த அவலம் எப்போது மாறுமோ?

No comments:

Post a Comment