Translate

Wednesday, 29 August 2012

இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

Posted Imageஇந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் விரிசல் தீவிரமடையக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதி காணி விவகாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் காது வரைக்கும் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த முத்தரப்பு சிக்கலுக்குக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் வாமதேவன் என்ற தமிழராவார். 



ஆரம்பத்தின் இந்த நிலத்தை இந்தியாவுக்கு விற்க அவர் இணங்கியிருந்தார்.

ஆனால், இறுதிக்கட்ட பேரம் நடந்து கொண்டிருந்தபோது, வாமதேவன் சீனாவுடன் பேரம்பேசத் தொடங்கினார்.

அதன் பின்னர் அவர்களுக்கிடையில் இணக்கப்பாடும் உருவானது.

இந்த விவகாரம் தற்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் காது வரைக்கும் போயுள்ளது.

இந்தநிலையில் அந்த நிலத்தை தமக்கே விற்கும்படி இந்தியாவிடம் இருந்து வாமதேவனுக்கு அழுத்தங்கள் வந்ததாக கூறப்படுகிறது.

சீனாவும் அந்தக் காணியை தமக்கே விற்றுவிடும்படி கடுமையான அழுத்தத்தை வாமதேவனுக்குக் கொடுத்துள்ளது.

இதனால் இருதரப்பு அழுத்தங்களில் இருந்தும் தப்பிக் கொள்வதற்காக வாமதேவன் இப்போது லண்டனுக்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தலையிட முடிவு செய்தது.

ஏற்கனவே இணங்கியபடி சீனாவே அந்த நிலத்தை வாங்கிக் கொள்ளட்டும் என்றும், கலாசார மையம் அமைப்பதற்கு கொழும்பில் வேறொரு அரச காணி அல்லது தனியார் காணி ஒன்றை அடையாளம் காண உதவுவதாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் கூறியது.

ஆனால் சிறிலங்கா அரசின் அந்த யோசனையை இந்தியா உறுதியாக நிராகரித்து விட்டது.

டுப்ளிகேசன் விதிக் காணியே தமக்கு வேண்டும் என்றும் வேறு இடங்களில் தேவையில்லை என்றும் இந்தியா உறுதிபடக் கூறிவிட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.pathivu.c...ticle_full.aspx 

No comments:

Post a Comment