Translate

Wednesday, 29 August 2012

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்

Posted Imageகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் கிழக்கு பிராந்திய மாநாட்டில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் எம்.சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இம் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ. செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி, எஸ்.அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நன்றி - செய்தியிணையம் 

No comments:

Post a Comment