பிரபாகரன் அழிந்து விட்டான். புலித்தமிழர்கள் அழிந்து விட்டார்கள் என நாம் நினைப்பது தவறு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் போன்ற பயங்கரமான புலித்தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.
30வருடங்களாக எமது இனத்தை அழித்த பிரபாகரனும் அவனது புலிப்படையும் அழிந்து விட்டதாக நாம் நினைக்க கூடாது. பிரபாகரனை விட கொடிய புலிப்பயங்கரவாதிதான் அரியநேத்திரன். இந்த புலி பயங்கரவாத தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் வெற்றி பெற்றால் அது புலிகள் வெற்றி பெற்றதற்கு சமனாகும். எனவே புலி பயங்கரவாத தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும். புலிப்பயங்கரவாத தமிழர்களை அழிக்க கூடிய மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவை வழங்கும் வகையில் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
புலிப்பயங்கரவாதிகளை அழித்த மகிந்த ராசபக்சவுக்கு நன்றி செலுத்துவதற்காக முஸ்லீம்கள் அனைவரும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment