100 இடியப்பம் சொதி- சம்பல் ! புதைந்திருக்கும் ஆபத்தை அறிவீர்களா ?
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இடியப்பம் ஒரு நல்ல உணவு சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் சாதாரண இடியப்ப தயாரிப்பைப் பின்பற்றுவது இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா ? அவர்கள் இடியப்பத்தை தயாரிக்கும் முறையை நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !
இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை.
சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா இடியப்பமாவில் கலக்கிறார்கள். இதில் 2 விடையங்கள் உள்ளது. ஒன்று இலகுவாகப் பிழியலாம் மற்றது இடியப்பத்துக்கு ஒரு பிரவுன் நிறக் கலர் வருகிறது. இவ்வாறு நிறைய எண்ணெயைக் கலந்து செய்யும் இடியப்பம் இலகுவில் காய்ந்துவிடாது.
பொலிஷ் பண்ணியதுபோல காயாமல் கனநேரம் இருக்கும். ஆனால் எண்ணெய் ஊற்றிச் செய்வதால், இவ்வகையான இடியப்பத்தில் அதிக கொழும்பு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது பொரித்த எண்ணையைப் பாவிப்பதால் அக்கொழுப்பில் கலஸ்ரோலும் அதிகளவு இருக்கும்.
கலஸ்ரோல் உள்ள அந்த எண்ணையை இடியப்ப மாவில் கலந்து அவிப்பதால் அது மீண்டும் சூடாகி மேலதிக கலஸ்ரோலை உருவாக்கும். இவ்வாறு தயாரிக்கப்படும் இடியப்பத்தை தான் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோம் நாங்கள். சிறிதளவும் கொழுப்பு இல்லை, உடம்பிற்கு நல்ல உணவு என்று நாம் நம்பி உண்ணும் உணவு எமக்கே யாமனாக அமைந்துவிடுகிறது. எல்லாக் கடைகளிலும் இவ்வாறு எண்ணையைக் கலந்து இடியப்பம் தயாரிக்கப்படுவது இல்லை. ஆனால் பல கடைகளில் அது நடக்கிறது. அந்தக் கடையில்தான் நீங்கள் இடியப்பத்தை வாங்கும் நபராகவும் இருக்கலாம் அல்லவா ? அதனால் தான் இதனை எழுதுகிறோம். பிரித்தானியாவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் உணவுப் பொட்டலங்களில், கொழுப்பு, காபோஹட்ரேட், சக்கரை அளவு 100 கிராமுக்கு எவ்வளவு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் இடியப்பம் போன்ற உணவுப் பொருட்களில் இதுபோன்ற விடையங்கள் எப்போதும் குறிப்பிடப்படுவது இல்லையே ! இவை முறையாக பகுப்பாய்வு செய்யப்படவேண்டும்.
கலஸ்ரோல் உள்ள அந்த எண்ணையை இடியப்ப மாவில் கலந்து அவிப்பதால் அது மீண்டும் சூடாகி மேலதிக கலஸ்ரோலை உருவாக்கும். இவ்வாறு தயாரிக்கப்படும் இடியப்பத்தை தான் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோம் நாங்கள். சிறிதளவும் கொழுப்பு இல்லை, உடம்பிற்கு நல்ல உணவு என்று நாம் நம்பி உண்ணும் உணவு எமக்கே யாமனாக அமைந்துவிடுகிறது. எல்லாக் கடைகளிலும் இவ்வாறு எண்ணையைக் கலந்து இடியப்பம் தயாரிக்கப்படுவது இல்லை. ஆனால் பல கடைகளில் அது நடக்கிறது. அந்தக் கடையில்தான் நீங்கள் இடியப்பத்தை வாங்கும் நபராகவும் இருக்கலாம் அல்லவா ? அதனால் தான் இதனை எழுதுகிறோம். பிரித்தானியாவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் உணவுப் பொட்டலங்களில், கொழுப்பு, காபோஹட்ரேட், சக்கரை அளவு 100 கிராமுக்கு எவ்வளவு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.
இடியப்பத்தில் எவ்வளவு கொழுப்புச் சத்து, சக்கரை, மற்றும் காபோஹட்ரேட் அளவு எவ்வளவு உள்ளது என்பது போன்ற விபரங்கள் முறையே வெளியிடப்படவேண்டும். இதனூடாகவே அதனை உண்ணும் நபர் ஒருவருக்கு இது குறித்த அறிவு கிட்டும்.
இதனை அந்த அந்த நாடுகளில் உள்ள கவுன்சிலே பரிசோதனை செய்யவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும். இதனூடாகவே நாம், சத்துள்ள உணவைச் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். தமிழர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வழிசமைக்கும்
No comments:
Post a Comment