Translate

Wednesday 29 August 2012

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

இராணுவப் பயிற்சி குறித்து சீமான் காட்டம்

இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வரும் அரசியல் கட்சித் தலைவர் களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி யளிப்பது தொடரும் என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பள்ளம் ராஜு கூறியிருப் பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவ மதிப்பதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலை வர் சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை அளிக்கா மல் அவர்களை இரண்டாம் தர குடி மக்க ளாகவே நடத்தி வருகிறது இலங்கை இனவாத அரசு. தங்களு டைய அரசியல் தன் உரிமைக்காக போராடிய தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்க திட்டமிட்ட ஒரு இனப் படுகொலைப் போரைத் தொடுத்தது சிங்கள பெளத்த இனவாத அரசு.


அந்தப் படுகொலைப் போருக்கு எல்லா வகையிலும் உதவியது இந்திய மத்திய காங் கிரஸ் அரசு. பூர்வீக தமிழர்களை மட்டுமன்றி இலங்கையின் பொருளாதார வளமாக திகழும் தேயிலைத் தோட்டங்களில் உழைத்து அந் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்திய இந்திய வம்சாவளி தமிழர்களை நாடற்றவர் களாக்கிய இலங்கை அரசு, 150 ஆண்டுகளாக அம் மண்ணில் உழைத்த இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு அகதி களாக தமிழகத்திற்குத் திரும்பி, இன்றுவரை வேரற்ற மக்களாக பரிதாபத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமன்றி கச்சைதீவை இந்திய மத்திய அரசு தாரை வார்த்ததற்குப் பிறகு 1977ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில் 546 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயம் பட்டு உடல் உறுப்புக்களை இழந்து உழைக் கத் தகுதியற்றவர்களாகியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளை தமிழினத்திகெதிராக தொடர்ந்து இழைத்து வந்த இலங்கையின் இராணுவத் திற்கு இந்தியாவில் பயிற்சி தொடரும் என்று இந்தியாவின் பாதுகாப்புத்துனை அமைச்சர் கூறுகிறார் என்றால் தமிழ் இனத்திற்கு எதிரான அந்நாட்டு அரசுகள் இழைத்த அனைத்துக் கொடுமைகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்றுதானே பொருள்.

இந்த நாட்டின் மீனவர்கள் 546 பேரை கொன்று குவித்த ஒரு நாட்டின் இராணுவத் திற்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று கூறுவார்களே ஆனால் இந்திய மீனவர்கள் மீதும் அந்நாட்டு தமிழினத்தின் மீதும் இலங்கை படைகள் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் நியாயமானது என்பதுதான் இந்திய மத்திய அரசின் நிலையா என்று கேட்கின்றோம். தமிழ் இனத்திற்கு மட்டுமல்ல இந்திய நாட் டிற்கும் எதிராக இலங்கை அரசு செயற்பட் டுள்ளதா இல்லையா? 1963ஆம் ஆண்டில் நடந்த போரில் இலங்கை அரசு சீனாவின் பக் கம் நின்றது. 1965,71ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது பாகிஸ் தான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று இந்திய நாட்டின் மீது தாக் குதல் நடத்த உதவியது இலங்கை அரசு. இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணி யிருந்தும் இலங்கையை நட்புநாடு என்று கூறுகிறார் மத்தியமைச்சர் பள்ளம் ராஜு. இந்தியா வின் நலனுக்கு எதிராக இருக்கும் நாடுதான் நட்புநாடா? இப்போது கூட இந்தியா தனது எதிரி நாடாக கருதும் சீனாவிடம் நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது இலங்கை. இலங்கையின் நட்பை பெற இந்தியா தூக்கிக் கொடுத்த கச்சதீவில் சீனாவின் இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கச்ச தீவில் நடந்த அந்தோனியார் விழாவிற் குச் சென்ற தமிழர்கள் அனைவரும் பார்த்து விட்டுவந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு அமைச் சர் இலங்கையை நட்புநாடு என்கிறார். எந்த அடிப்படையில் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு? யாருக்கும் புரியவில்லை. இலங்கை நட்பு நாடு என்றால் தமிழ்நாடும் தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா? என்று கேட்கிறோம். இந்த நாட்டின் மீனவர் களை பல நூற்றுக்கணக்கில் கொன்று குவித் தது இந்த நாட்டின் இறையாண்மையை அவ மதிக்கும் நடவடிக்கையல்லவா? தமிழர்கள் நலன் பற்றி பேசினாலே இறையாண்மைக்கு எதிரான பேச்சு என்று கூப்பாடு போடும் காங் கிரஸ் காரர்கள் இந்திய மீனவர்களை இலங் கைக் கடற்படையினர் கொல்லும் போது அது இறையாண்மையை மீறிவிட்டது என்று ஒரு போதும் கண்டிக்காதது ஏன்?

இறை யாண்மை என்பது ஒரு நாட்டின் மண்ணையும் மக்களையும் காப்பதற்கான அந்நாட்டு அரசுக்கு உரிய உயர்ந்த தார்மீக உரிமை யல்லவா? அது ஏன் தமிழ்நாட்டின் மீனவன் கொல்லப்படும் போதும் தாக்கப்படும் போதும் அமைதியாகி விடுகிறது என்பதே நாம் தமிழர் கட்சி எழுப்பும் கேள்வியாகும். இந்திய மத்திய அரசு தனது நட்பு நாடு என்று இன்று பறைசாற்றும் இலங்கை, உண்மையில் சீனத்தின் நட்பு நாடாக ஆவ தையும் தனது எதிரி நாடாக நின்று இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்த லாக ஆகப்போவதையும் இந்தியா பார்க்கத் தான் போகிறது என சீமான் தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment