Translate

Wednesday 29 August 2012

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

கலைஞர் கருணாநிதி கேள்வி? இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சீனாவின் தலையீடு அபிவிருத்தி என்ற போர்வையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இலங்கை அரசு இந்திய அரசுடனான உறவுகளை புறந்தள்ளி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங் களை சீனாவுடன் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில் இலங்கை எப்படி இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்க முடியும்? என தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் பலாலி, காரைநகர், மன்னார், ஆனையிறவு, தள்ளாடி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் இலங்கை அரசின் இரா ணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை அமைத்துள்ளது. அந்த முகாம் கள் அங்கே அமைக்கவும், இராணுவ வீரர் கள் மற்றும் அதிகாரிகள் குடும்பங்கள் அங்கே தங்குவதற்குமான ஏற்பாடுகளை எல்லாம் சீனாதான் செய்து தருகிறது.

இதைப் பற்றி விவாதிக்க சீன இராணுவ அமைச்சர் லியாங் குவாங்லி என்பவர் இன்று (29.08.2012) இலங்கை வருகிறார். அப் போது உயர்மட்ட இராணுவப் பிரதிநிதிகளின் கூட்டமும் நடைபெறவுள்ளது. மேலும் வருகின்ற செம்டெம்பர் 15ஆம் திகதியன்று சீன மக்கள் காங்கிரஸின் துணைத் தலைவர் யு பாங்கோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்றும் இலங்கைக்கு வருகிறது. அந்தக் குழுவிலே 96 சீனப் பிரதி நிதிகள் இருப்பார்களாம். இந்தக் குழு இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரில் பார்வையிட இருக்கிறார்களாம். இது மாத்தி ரமல்ல, இலங்கைக்கு சீனா 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 14 திட்டங்களை நிறை வேற்றித் தந்திருக்கிறது. இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் துறையில் பணிபுரிபவர்களின் குழந்தை களை படிக்க வைக்க 9 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கூடம் ஒன்றை சீனா கட்டிக் கொடுத்தி ருக்கிறதாம். சீனாவிடமிருந்து 59 கோடி ரூபாய் செல வில் எம்.ஏ. 60 ரக பயணிகள் விமானம் வாங்கிட இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவை விட 6 மடங்கு அதிகமான பல் வேறு உதவிகளை சீன நாடு இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கை நட்புநாடு என்று சொல்லிக் கொண்டிருக் கிறதோ? அதை ஒருதலை நட்பு என்றுதான் சொல்ல முடியுமே தவிர இருநாடுகளுக்கும் இடையிலான சுமுகமான நட்பு என்று எப்படிச் சொல்லமுடியும்? இந்தியப் பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இராணுவ இணை அமைச்சர் பள்ளம் ராஜூ தெரிவித்துள்ள கருத்தினை மறுபரிசீலனை செய்வதோடு நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிடவும் மீண் டும் இப்படிப்பட்ட இராணுவப் பயிற்சிகள் இல ங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவிலே அளிப்பதை உறுதியாகத் தவிர்திடவும் வேண் டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment