‘உதயன்’ நாளிதழின் ஆசிரியருக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் எவற்றையும் முன்னெடுப்பதற்கும் ஆசிரியரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை நீடித்துள்ளது.
ஒக்ரோபர் 31ஆம் திகதி வழக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீதிவான் கணேசராசா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்சேபனைகள் ஏதாவது இருப்பின் அவற்றை அணைக்குமாறு நீதிபதி சிறிஸ்கந்தராசா உத்தரவிட்டார்.
ஜூன் 28ஆம் திகதி ‘உதயன்’ பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று தொடர்பில் யாழ்.நீதிவான் கணேசராசா தமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியே ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் சார்பில் ‘ரிட்’ மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று இந்த ‘ரிட்’ மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா, திபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிவான் கணேசராசா மன்றில் முன்னிலையாகி இருந்தார். ஜூன் 28ஆம் திகதி ‘உதயன்’ நாளிதழில் வெளியான செய்தி ஒன்று தொடர்பில் விளக்கமளிக்குமாறு தம்மை நீதிமன்றுக்கு அழைத்த யாழ்.நீதிவான் சட்டமுறையற்ற வகையில் தம்மை பகிரங்க நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோருமாறு பலவந்தப்படுத்தினார் என்று ‘ரிட்’ மனு ஒன்றைப் பத்திரிகை ஆசிரியர் தே.பிரேமானந்த் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment