தமிழக மீனவர்களை தாக்குவது எப்படி- இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆராய்வு
இலங்கை இந்திய கடற்பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை இந்திய கடற்படை உயரதிகாரிகளின் நான்கு நாள் கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ளது. 30ஆம் திகதிவரை இக்கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
சிறிலங்கா கடற்படையின் கரையோர பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஆரா டயஸ் தலைமையிலான குழுவினரும், இந்திய கடற்படை உபதளபதி வைஸ் அட்மிரல் முரளிதரன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளின் கடற்படையினரினதும் தொழில்சார் தகவல்களை பகிர்ந்துக் கொள்வது தொடர்பில் இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை இந்திய கடல்பிராந்திய பாதுகாப்பு குறித்தும் இந்த நான்கு நாள் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment