Translate

Wednesday 29 August 2012

கொடூர தாக்குதலினால் நினைவற்ற நிலையை எட்டியிருக்கும் தமிழ் அரசியல் சிறைக்கைதி!

வவுனியா சிறைச்சாலையில் ஈழ தமிழ் சிறைக்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மரணத்திற்கு இட்டுச்சென்ற அவலங்களையும் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு காலி சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலின் காரணமாக தமிழ் அரசியல் சிறைக்கைதி ஒருவர் நினைவற்ற நிலையில் வீழ்ந்திருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

சுந்தரம் சத்தீஷ்குமார் வயது 34 என அடையாளம் காணப்பட்ட அத்தமிழ் கைதி 2008-ஆம் ஆண்டில் கொடிகாமம் வட்டார அவர் குடியிருப்பில் இலங்கை இராணுவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இலங்கை காவல் துறையினர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு எவ்வித குற்றச்சாட்டு பதிவுகளுமின்றி கொழும்பு 'நியூ மெகசீன்' சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஆகஸ்டு 21-ஆம் நாளன்று அவர் கல்லி சிறைக்கு மாற்றவும் பட்டுள்ளார்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று சுந்தரம் சத்தீஷ்குமாரைக்காண அவரது மனைவி திருமதி. கவிதா மற்றும் பத்து வயது மகள் சாகித்தியா சென்றபோதுதான் அவர் காலி சிறைச்சாலைக்கு மாற்றலான செய்தி அவர்களுக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து காலி சென்று பார்க்கையில் அவர் உடலிலும் தலையிலும் பலத்த காயங்களுடன் நினைவற்ற நிலையில் கரப்பிட்டியா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுருந்ததனை கண்டுள்ளனர்.

இன்னிலையில் காலி சிறை அதிகாரிகள் சிங்கள பதிவு ஆவணத்தில் திருமதி. கவிதாவின் கையொப்பம் பெற முயன்றுள்ளதாகவும் அதனை அவர் மறுத்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தன.

No comments:

Post a Comment