சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஒருவர் மாறி ஒருவர் மேற்கொள்ளும் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாளர் ஆரம்பித்து வைத்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய சிறப்பு முகாம்களில் 47 இலங்கைத் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த முகாம்கள் மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment