இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு
அரசுக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பலம்பொருந்திய இரு மேற்குலக நாடுகளும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கிவருகின்றன என்று அரச புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது என அறியமுடிகின்றது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றும், அது தொடர்பிலான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது.
நாட்டில் அண்மைக்காலமாக அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள், விவசாயிகள், மாணவ அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இவ்வாறு உள்நாட்டில் இடம் பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குத் தேவையான நிதி உள்ளிட்ட இதர வசதிகளை வழங்கி, அவற்றின் பின்னணியில் இரு மேற்குலக நாடுகளும், சில அரசசார் பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருவதாகவே அரச புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அரச எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களை முன்னெடுத்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற விடயத்திலும் அரசு தற்போது கவனம் செலுத்திவருகின்றது.
அதேவேளை, புலனாய்வுத் துறைக்குக் கிடைத்துள்ள தகவல் தொடர்பில் அரசு தமது வெளிநாட்டுத் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை உஷாராக இருக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
http://onlineuthayan...601362127257577

No comments:
Post a Comment