Translate

Wednesday 29 August 2012

பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும.;

தமிழர் தாயகத்தில்14.08.2006 அன்று சிங்கள கொலைவெறி அரசின் பறக்கும் இயந்திரக்கழுகள் அதிகாலை ஏவிய கோழைத்தனமான குண்டுவீச்சினால்  61 பள்ளி மாணவிகள் துண்டு துண்டாகி சிதறிப்போயினர். அன்பான அரவணைப்பும், ஆறுதலான உறவுகளும் என்று பெற்றவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் பெருமிதத்தோடு தேசியத்தலைவரின் அரவணைப்பில் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் கோழைத்தனமாக கொல்லப்பட்டு 6 வருடங்களாகி விட்டது. என்று மனதையும், நினைவையும்,விட்டு மாறாத குழந்தைகளின் நினைவு நிகழ்வையும், ராசீவு காந்தி  கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை கைதிகளின் விடுதலைக்காக தண்டனையை இரத்துச்செய்ய கோரி தீக்குளித்த தமிழின உணர்வாளர் தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவாக பிரான்சு மனிதவுரிமைகள் சதுக்கத்தில் ஈகவணக்க நிகழ்வு நடைபெற்றன.


ஈகச்சுடரினை மாவீரர் மேஐர் சூட்டி, மாவீரர் கப்ரன் வரதப்பா ஆகிய இ;ரு மாவீர்களின் சகோதர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் அனைத்து மக்களாலும் செலுத்தப்பட்டது. வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்காக நாள்தோறும் ஒன்று கூடும் மனிதவுரிமைகள் சதுக்கத்தின் மேடையில் இந்நிகழ்வு நினைவு கூரலில் விடுதலை உணர்வுப்பாடல்களுக்கும், ஈகப்போராளிகள் நினைவுப்பாடலுக்கும், செவரோன் தமிழ்ச்சங்க மாணவிகளும், ஆர்nஐந்தே தமிச்சங்க மாணவியும் நடனம் வழங்கி அனைத்து வெளிநாட்டு மக்களின் கவனத்தை கவர்ந்திருந்தனர். தோழர் செங்கொடியின் நினைவாக தாய்த்தமிழ்நாடாம் தமிழகத்தில் 19ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்ட 'இப்படிக்கு தோழர் செங்கொடி '' ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் வெளியிட்டு வைக்க மாவீரரின் சகோதரர் அதனைப் பெற்றுக்கொண்டார். பிரெஞ்சு மொழியில் மகளிர் அமைப்பின் உறுப்பினர் திருமதி. ரேவதி அவர்களும், ஆங்கிலத்தில் பிரான்சின தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும் ஆற்றியிருந்தனர். நம்புங்கள் தமிழீழம் உணர்வுப்பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment