Translate

Wednesday, 29 August 2012

இலங்கை அரசின் இனவெறியை இந்தியா ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது; விஜயகாந்த்


 
உலக அரங்கில் இலங்கை அரசின் இனவெறி போக்கு தமிழர் நெஞ்சங்களில் எரியும் ஈட்டியென பாய்ந்துள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் சிங்கள அரசின் இராணுவப் பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன.


இந்த போக்கை தடுத்து நிறுத்த இந்திய அரசு அக்கறை காட்டாது தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பதை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜூலை மாதம் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இலங்கை விமானப்படையினருக்கு இந்திய அரசு பயிற்சி அளித்து வந்தது.

இலங்கை படைக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 27ஆம் திகதியன்று குன்னூரில் உள்ள இராணுவ பயிற்சி முகாம் முன்பு தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது எமது தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பணயம் வைத்து இலங்கை அரசோடு இந்திய அரசு ஒரு தலை நட்பு கொள்ளத் துடிப்பது ஏன் என்பதுதாளன் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை. சிங்கள இனவெறி அரசின் இந்த துரோக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி வழங்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment