Translate

Wednesday, 29 August 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழு வெறும் இறப்பர் முத்திரையாக உள்ளது - பசில் ராஜபக்ஷ

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிறந்த செயற்பாடு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுவது எனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கிடைக்கும் பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டுமாயின் தமது கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பதாகவும் அப்படியான தீர்வை பெற்று கொடுக்க வேண்டுமாயின் தெரிவுக்குழு ஒன்று தேவைப்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை வெறும் இறப்பர் முத்திரையாக மாற்றும் தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. இனப்பிரச்சினைக்கு நீடித்த தீர்;வை வழங்குவதற்காக மக்களின் சபையாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமமிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறினாலும் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு கிழக்கில் அந்த கட்சி போதிய வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது போனது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment