Translate

Thursday 30 August 2012

மஹிந்தவின் வீரத்தனமும் சிங்கள மக்களும்

essayவீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.
 தமிழில் : வியெஸ்ரி

மூலம்: ராவய

 இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. 
 
கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு கொடுத்ததன் மூலம் பிரபாகரன் தமிழ் மக்கள் மத்தியில் வீரபுருஷரானார். 
 
அவர் படிப்படியாக கடும்போக்குவாதியாக மாற்றமுற்ற பின்னரும், தமிழ் மக்கள் மனோ ரீதியில் பிரபாகரனின் தலைமைத்துவப் பிம்பத்தில் ஈடுபாடு காட்டி தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு நல்கினர்.
 
விடுதலைப்புலிகளின் தலைவரால் என்றோ ஒரு நாள் தமிழீழம் பெற வாய்ப்பமையும் என்ற நம்பிக்கை காரணமாக, தமிழ்மக்களது மனச்சாட்சி அற்றுப்போனதுடன் அவர்களது நாக்குகளும் பேச்சிழந்தன; ஊமை யாகின. மாயையில் மனது மயங்கி, கனவுலகில் சஞ்சரித்த தமிழ் மக்கள் பிரபாகரனின் அகோரச்செயற்பாடு களைப் பொருட்படுத்தினாரல்லர். 
 
வீரத்தனம் என்பதன் அர்த்தம் இடத்துக் கிடம், காலத்துக்கு காலம், சந்தர்ப்பத் துக்கு ஏற்றவாறு மாற்றமுறும் ஒன்று. வீரத்தனம் மற்றும் நல்லொழுக்கம் என்ற சொற்களை நீண்ட காலத்துக்கு கடும்போக்குவாதத்துக்கான அர்த்தமாகப் பயன்படுத்திக் கொண்டால், கடும்போக்குவாதத்தையே உண்மையான வீரத்தனம் என நம்பும் நிலை ஏற்படும் என கிலெம்பெரரி என்ற அறிஞர் தமது "லாங்விச் ஒவ்தேர்ட் றீச்' என்ற நூலில் விபரித்துள்ளார். வீரத்தனமும் கடும்போக்குவாதமும் ஒன்றிணைவது "நாஸி' க் கோட்பாடாகக் கூடக்கொள்ள இயலாத ஒன்று. விடுதலைப் புலிகளது நிர்வாகத்தில் தமிழ் மக்கள் இதனை அனுபவிக்க நேர்ந்தது. இன்று ராஜபக்ஷ நிர்வாகத்தில் சிங்கள மக்களும் அத்தகைய நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி நேர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 
 
அண்மையில் இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே கொழும்பில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியைச் சந்திக்க நேர்ந்தமை பலரும் அறிந்ததொன்றே. குறிப்பிட்ட போட்டித் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து, இலங்கை ரசிகர்கள், பிரமுகர்களுக்கான பார்வையாளர் பகுதியிலிருந்து கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்திக் கோஷமெழுப்பிய கிரிக்கெட் ரசிகர்கள் மீது வெற்றுச் சோடா போத்தல்களை வீசித்தாக்குதல் மேற்கொண்டதுடன் தூஷண வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
 அமைச்சர்கள் போன்ற அரச உயர் மட்ட ராஜதந்திரிகள் மட்டத் தரப்பின ருக்கென  ஒதுக்கப்பட்ட விசேட பார்வை யாளர் பகுதிக்குள் அனுமதியின்றி வேறெவரும் உள்நுழைய இயலாது என்பது தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் இத்தகைய அநாகரிகச் செயற்பாடு அரசியல் அதிகாரத் தரப்பினரின் அனுசரணையுடனேயே மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் என நம்ப இட முண்டு. 
 
குறிப்பிட்ட தாக்குதலை மேற் கொண்டோர் அரசியல் அதிகாரத்தரப்பினரின் ஆதரவாளர்கள் என்ப தாலேயே அவர்களால் இவ்விதம் இந்திய கிரிக்கெட் அணி ஆதரவாளர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் மேற்கொள்ள முடிந்ததாக நம்ப இடமுண்டு.
 
குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தின் போது, தாக்குதல்களுக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்கள், உதவி கோரி கூக்குர லிட்ட போதிலும், அவர்களுக்கு உதவ எவரும் முன்வரவில்லை. பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரின் உதவி கோரப்பட்டும் கூட அவர்கள் கூட கண்டும் காணாதது போன்று அங் கிருந்து விலகிச்சென்றுவிட்டனர்.
 
 இலங்கை அணி போட்டியில் தோல்வி யுற நேர்ந்த தொடரின் ஏனைய போட்டி களின் முடிவிலும் இந்திய அணியின் ஆதரவாளர்கள், இலங்கை அணி ஆதரவாளர்களின் கடும்கோபத்துக்கு உட்பட நேர்ந்தது. 
 
விளையாட்டு ரசிகர்கள், தம் தீவிர ரசிகத்தனம் காரணமாக எல்லைமீறி உணர்ச்சிவசத்தால் தவறு செய்வது வழமையே. ஆயினும், குறிப்பிட்ட சம்பவத்தில் அரசியல் பின்புல  ஆதரவுடன் சட்டம், ஒழுங்கை மீறும் விதத்தில் இலங்கை அணி ரசிகர்கள் நடந்துகொண்டமை பரபரப்பான ஒரு சம்பவமாக அமைந்தது. 
 
அரசின் மத்தியிலேயே கடுங்கோட்பாட்டு நிலை அரசோச்சுவது கவலைக்குரிய ஒன்றே. இச் சம்பவம் அதனையே தொட்டுக்காட்டி நிற்கிறது. கிழக்கு மாகாணம்  பானமபிரதேசத்தில்  அமைந்திருந்த பிள்ளையார் கோவில், பானம பௌத்த விகாரை நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஊர்காவல் படை வீரர்களும், சிவில் உடுப்பில் இராணுவ வீரர்களும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.
 
 அந்த நடவடிக்கைக்கான திட்டங் களை வகுத்ததும், செயற்படுத்துவித் ததும் அப்பகுதி விகாரைக்குப் பொறுப் பான பௌத்த பிக்கு ஒருவரே அந்த வகையில் சிங்கள பௌத்த கடுங்கோட் பாட்டாளர்கள், ஒழுக்கம் பேணுவதில் உணர்ச்சி வசப்படும் கிரிக்கெட் ரசிகர் களை விட தரத்தில் தாழ்ந்தவர்களே. 
 
இதில் கவலைக்குரியது என்னவெனில் பாதுகாப்புப் படைத் தரப்பினரும் இந்த அநாகரிகச் செயற்பாட்டில் பங்குகொண்டமையே. அரசியல் அதிகாரப் பாதுகாப்பின் பின்னணியுடன் சிங்கள கடுங்கோட்பாட்டாளர்கள் முன்னர் விளையாட்டுத்துறையில் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
 
 கிழக்கில் இந்துமதத்தவர்களுக்கு எதிராக பௌத்த கடுங்கோட்பாட்டாளர்களுடன் பாதுகாப்புப்படையினரும் இணைந்து செயற்பட்டுள்ளனர். இதனால் சிங்கள இனத்தின் இருப்புப் போன்று அதன் கலாசாரப் பெருமையும் தாழ்வுற நேர்ந்துள்ளது. சிங்கள இனத்தின் பாரம்பரிய செயற்திட்டங்களை நிலைநிறுத்தும் விதத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தரப்புக்களின் அனுசரணையுடனேயே வர்க்க வாத, மதகடுங்கோட்பாட்டுவாதம் பயன்படுத்தப்படுகிறது . 
 
ராஜபக்ஷ நிர்வாகம் போரை வென்றெடுத்தமை உண்மையே.  அது மட்டுமே அத்தரப்பினரின் ஒரேயொரு வெற்றி ஏனைய சகல விடயங்களிலும் அவர்களது திறமை மழுங்கிப்போயுள்ளது. அண்மையில் மீளியக்கப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி தொகுதி மீண்டும் பழுதுபட் டுள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் ஐந்து பார தூரமான தவறுகள் இடம்பெற்றுள்ளன.
 
 ஆனால் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது பதவியைத் துறக்க முன்வரவில்லை. அவ்விதம் ஒரு துறையில் இடம்பெறும் தவறுக்குப் பொறுப்பேற்று அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது பதவியை துறக்கும் நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டிருந்திருக்குமானால், இன்றைய ராஜபக்ஷ நிர்வாகத்தில் அமைச்சரவை வெறுமையாகியிருந் திருக்கும். 
 
போரினால் இடம்பெயர்ந் தோரை  மீள்குடியமர்த்துவதில் அரசு பூரண வெற்றி கண்டிருப்பதாக பாதுகாப்பின் செயலாளர் உலகத்துக்குப் பறை சாற்று கிறார். அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்குடைய ஆனந்தசங்கரியோ அரசின் மீள்குடி யேற்றச் செயற்பாடுகள், இடம்பெயர்ந் தோரின் சிரமங்களுக்கு பரிகாரம் அளிக்கும் விதத்தில் திருப்திகரமாக அமையவில்லையெனக் குற்றம் சாட்டுகிறார் அந்த வகையில் இன்றைய ராஜபக்ஷ நிர்வாகம் உள்ளுடல் இல்லாத வெளியில் தோலால் பூசி மெழுகப்பட்ட பொருளொன்றை ஒத்ததே அண்மையில் நடந்து முடிந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை ஒலிம்பிக்குழு ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான நுழைவுச் சீட்டுகளைக் கொள்வனவு செய்திருந்த போதிலும், அதில் கலந்து கொள்ளச் சென்ற விளையாட்டு வீரர்களை நெறிப்படுத்த எந்தவொரு பயிற்சியாளரையும் உடன் அனுப்பத் தவறியுள்ளது. 
 
கடந்த நிதியாண்டில் விளையாட்டுத்துறைக்கென 1923 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டபோதிலும், அந்த நிதி  நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த வல்லாது ராஜபக்ஷ குடும்பத்தினரின் மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் ஹம்பாந்தோட்டையில் விளையாட்டரங்கு நிர்மாணிக்கச் செலவிடப்பட்டுள்ளது. 
 
அரசின் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை மழுங்கடிக்க வீர புருஷர்களை உருவாக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. ராஜபக்ஷ நிர்வாகத்தில் தேசியத்தை கட்டியெழுப்புவது என்பதன் அர்த்தம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் தொடர்ச்சியாக மோதல்களை இடம்பெறச் செய்தல் என்பதாகும்.
 
 பெரும்பான்மையின சிங்கள மக்களே இந்த நாட்டின் உருத்தாளர்கள் எனவும் ஏனைய சகலரும் அவர்களது எதிரிகளே என்றதொரு உணர்வை சிங்களமக்கள் மனதில் நிலைநிறுத்தும் போக்கு இது. 
 
அந்த விதத்தில் மகாவம்ச சான்றிதழுடன் ராஜபக்ஷ தரப்பினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கல், நிர்வாகச்சீர்கேடுகள் என்பவற்றை மூடிமறைத்து எவ்வித இடையூறுமின்றி நாட்டை நிர்வகிக்க இயலும்.
 
பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கி, கட்டிவளர்த்தார் கடைசியில் முடிவில்லா அதிகாரஆசையால் ஈர்க்கப்பட்டு அதன் அழிவுக்கே வழிசமைத்தார். தமக்குக்  கீழ்படிந்த தமிழீழமே அவரது வேட்கையாக அமைந்தது. தமது கடுங்கோட்பாட்டு நிலைப்பாட்டிலிருந்து  ஓரங்குல மேனும் அசைந்து கொடுக்க முன்வர அவர் தயாராயில்லாமையால் முடி வில்லாத போர் ஒன்றுக்கு  நாடு உட்பட நேர்ந்தது.
 
 விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கிய சிற்பியே அதன் அழிவுக்கும் காரணமாக அமைந்ததால், அவர் காப்பற்ற, பாதுகாக்கமுயன்ற தமிழ் மக்களையும் பேரவலத்துக்குள் சிக்கவைத்தார்.
 
  தமிழ் இனத்துக்காக அவரது அர்ப்பணிப்பு பெறுமதிமிக்கதே ஆயினும், இனம் குறித்த அவரது பார்வை, சிங்கள எதிரி தமிழினத்துக்குச் செய்த பாதிப்பை விட அதிகமானதெனக் கொள்ளத்தக்கதே. அந்த வகையில் தமிழ்மக்கள் அபாயஎச்சரிக்கையையும் கணக்கில் எடுக்காததால் தாமே தமக்கான புதைக்குழியைத் தோண்ட நேர்ந்தது. அதே போன்று  ராஜபக்ஷ நிர்வாகமும். 
 
இனவாதம் என்ற மாயையில் சிக்குண்டு நலிவடைகின்றோம். வீர புருஷர்கள் என்ற மாயையின் பின்னால் சென்று வீழ்ச்சியையும் நாசத்தையும் சந்திக்காமல் வெளியேற முயல்வோம்.

No comments:

Post a Comment