போராட்டம் வெற்றி அளிக்கவில்லை
வடபுலத்தை சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொண்டு ஜெனிவாவினில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவும் ஆசியும் வேண்டியும் இன்று நடத்தப்படவிருந்த போராட்டங்கள் வெற்றி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டமையே போராட்டங்கள் வெற்றி அளிக்காமைக்கான காரணம் எனப்படுகின்றது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை வடக்கை சேர்ந்த அரச அதிபர்கள் சந்தித்த வேளை இத்தகைய போராட்டங்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிபர்கள் இப்போராட்டம் தொடர்பாக உடனடியாக பிரதேச செயலர்கள் மற்றும் செயலக அதிகாரிகளது கவனத்திற்கு தொலைபேசியூடாக கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையினில் இன்று பிற்பகல் வேளையினில் யாழ.மாவட்ட செயலக வளவினுள் குவிந்த படை புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஊர்வலமாக புறப்பட நிர்ப்பந்தித்தனர். அவர்களிடமிருந்து தப்பி பிழைக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடினமாகப்போராட வேண்டியிருந்தது. பலரும் அறைகளுக்குள் பதுங்கிக்கொண்டனர். மற்றொரு சாரார் கடமை நேரத்தில் இத்தகைய போராட்டங்களினில் ஈடுபட மறுத்தனர்.
இறுதியில் அரச அதிபர் ஒரு சில வாகனங்களை ஏற்பாடு செய்து அருகிலுள்;ள பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிச்சென்று வழிபாட்டினில் ஈடுபட வைத்திருந்தார்.
இதே கதை வவுனியா பகுதிகளினிலும் நடந்திருந்தது. இங்கும் பெரும்பானமை இனத்தை சேர்ந்தவர்களே போராட்டங்களினில் இணைந்து கொண்டனர். ஏனையோர் தப்பித்து வீடுகளை சென்றடைந்திருந்தனர்.
No comments:
Post a Comment