Translate

Thursday, 1 March 2012

இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவு தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட இலங்கை அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்தும், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அவர் இந்தக் கடிதத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறலகள் தொடர்பாக நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறும் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment