Translate

Thursday 1 March 2012

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து விடுத்த கோரிக்கைகள் இன்று அவருக்கே நெருக்கடியாகி உள்ளன: மங்கள சமரவீர


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தவறுகளை தேசிய கொடியைக் கொண்டு மறைப்பதற்கு அனுமதிக்க முடியாது என ஐ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினரான இருந்த காலத்தில் விடுத்த கோரிக்கை, அவருக்கே நெருக்கடியாக அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரை ஹசார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதவி வழங்கும் நாடுகள் ஏன் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதில்லை என அவர் அப்போது நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். மனித உரிமைகளை மேம்படுத்தினால் உதவிகளை வழங்க முடியும் என நாடுகள் நிபந்தனை விதிக்க வேண்டுமென அவர் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கைகள் தற்போது அவருக்கே எதிராக அமைந்துள்ளது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படத் தவறும் பட்சத்தில் வெளிநாடுகள் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் நிலைமை ஏற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment