
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொள்ளுபிட்டி 5ஆம் குறுக்கு வீதியில் வசிப்பவர் என்றும் குறித்த நபரை உயிரிழந்த அப்பெண் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கணவருடன் வாழ்ந்து வந்த 48 வயதான சுதர்ஷினி சஹீலா, கணவரால் கைவிடப்பட்டதையடுத்து இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்நலையில்,கொள்ளுப்பிட்டியில் தமிழ் இளைஞன் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து, இருவரும் விடுதியில் தங்கியிருந்த போதே, தனது இரண்டாவது கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகள், பணம் என்பன பாதுகாப்பாக இருப்பதாகவும் பணத்திற்காக கொலை செய்யவில்லை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment