இலங்கைக்குழுவுடன் வருகை தந்திருக்கும் கனகரத்தினம் நேற்று ஜெனிவா நகரை சுற்றிப்பார்ப்பதற்கு என வேறு ஒரு நபருடன் சென்ற போது இரு தமிழ் இளைஞர்களை கண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் கனகரத்தினத்தை நோக்கி வருவதை கண்ட கனகரத்தினம் தான் இருந்த ஹொட்டலை நோக்கி கால்தெறிக்க ஓடியுள்ளார்.
கூட சென்றவரும் என்ன ஏது என்று அறியாமல் பின்னால் ஒடியிருக்கிறார். ஹொட்டலுக்குள் வேகமாக ஓடிவந்து புகுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ஹொட்டல் ஊழியர்கள் என்ன ஏது என்று விசாரித்தனர். அங்கு தங்கியிருந்த சிறிலங்கா குழு மத்தியிலும் கலக்கமும் பயமும் ஏற்பட்டது. தன்னை நோக்கி இருவர் வந்ததாகவும், அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என கனகரத்தினம் கூறியிருக்கிறார்.
அந்த இளைஞர்கள் யார்? கனகரத்தினத்தை தாக்க வந்தார்களா? அல்லது பயப்பிரமையில் கனகரத்தினம் ஓடினாரா என்று தெரியவில்லை. அதன் பின் கனகரத்தினம் ஹொட்டலை விட்டு வெளியே செல்லவே இல்லை. பாவம் கனகரத்தினம் தமிழர்களை கண்டாலே ஓட்டம் பிடிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு வந்து விட்டார்.
No comments:
Post a Comment