Translate

Friday, 2 March 2012

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் கையேடு வெளியிடப்பட்டது


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள  “WE ACCUSE; WAR CRIMES AND GENOCIDE”  எனும் கையேடு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

http://kathiravan.net/news.php?mid=35

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கையேடு, அரசுகள், அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் என சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 29-02-2012 அன்னு பிரித்தானிய பாராளுமன்ற கட்டித் தொகுதியில் இக்கையேடு வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Sharma அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நா.த.அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபாரன் அவர்கள், புத்தகத்தின் முக்கியத்துவம் மற்றும் உள்ளடக்கம் குறித்தும் எடுத்தியம்பினார்.

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றிருக் கொண்டிருக்கும் சரியான தருணத்தில், இந்தக் கையேடு வெளிவந்திருப்பதாக குறிப்பிட்ட பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர் Sharma அவர்கள், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர்கள் மீது இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்களை இக்கையேடு உள்ளடக்கியுள்ளதாக பாரட்டுத் தெரிவித்தார்.

நா.த.அரசாங்கத்தின் உதவிப்பிரதமர் சேகர், அவை உறுப்பினர்கள் மணிவண்ணன், நிமலன், யோகலிங்கம், குணசீலன் மற்றும் செயலர்கள் ஜெயந்தன், வாசுகி உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் பிரித்தானியச் செயலர் வாசுகி அவர்கள் இந்நிகழ்வினை ஒருங்குபடுத்தியிருந்தார்.
http://kathiravan.net/news.php?mid=35

No comments:

Post a Comment