
இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி, சமாதான முயற்சிகள் மற்றும் நாட்டின் இறைமையினைப் பாதுகாப்பதற்கு சீனா முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளதாக, “சின்ஹுவா” செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி லியாங்கை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீனா சென்று கலந்துரையாடியுள்ளார்.
இருவருக்கிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போதே சீன பாதுகாப்பு அமைச்சர், இவ் உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாகவும் சீனாவின் அடிப்படை நலன்களில் இலங்கையின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்ததாகவும் குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை- சீனாவின் நட்புறவு இராணதந்திர ரீதியாக சீராக விருத்தியடைந்து வருவதாகவும் இந்நிலையில், இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்கவும், நட்புறவு என்பவற்றை உறுதி செய்யவும் இலங்கையுடன் ஒத்துழைக்க சீனா விரும்புவதாக லியாங் குறிப்பிட்டுள்ளார்.
சீன - இலங்கை உறவுகள் எப்போதும் மிக ஆரோக்கியமாக இருக்கும் எனவும் சீனாவின் ஆதரவுக்கு நன்றியையும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment