Translate

Thursday, 1 March 2012

இன்று பிரித்தானியாவில் பெற்றோர் பெரும் பரபரப்பாக இருப்பர் !

இன்றைய தினம் பிரித்தானியாவில் பெற்றோர்கள் பெரும் ஏக்கத்தில் இருப்பார்கள் என்றும், பலர் தமது வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. 11+ என்று அழைக்கப்படும் 10 வயது நிரம்பிய மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாக உள்ளது. தமிழ் பெற்றோர்கள் தொடக்கம் அனைத்து இன மக்களும் இந்தப் பரிட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர்.
பிரித்தானியாவில் 10 வயதுச் சிறுவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்த பரிட்சையின் பெறுபேறுகள், மிக முக்கியமான விடையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தபால்காரரின் வரவையே பெற்றோர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர். பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை கிடைக்கவேண்டும், என்பதற்காக பெற்றோர் பெரிதும் பாடுபட்டிருப்பர். இன்று வெளியாகவுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், அவர்களுக்கு எந்தப் பாடசாலை கிடைக்கும் என்று தெரியவரும். குறிப்பாக லண்டன் வாழ் தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் 11+ பரீட்சையில் அதிக சித்திபெற்று நல்ல பள்ளிக்கூடத்துக்குச் செல்லவேண்டும் என அதீத ஆர்வம் காட்டுவது வழக்கம். இந் நிலையில் இது தமிழ் சமூகத்துக்கு மிக முக்கியமான நாட்களுள் ஒன்றாகும்.

தமது பிள்ளைகள் நல்ல சித்தியடைந்தால், பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பர். இருபினும் குறைந்த மதிப்பெண்களை எடுத்து நல்ல பள்ளிக்கூடத்தை தவறவிட்ட பிள்ளைகளைப் பொற்றோ கடிந்து அவர்களின் மனதைப் பாதிக்கும் வார்த்தைகளைப் பாவிக்காமல் இருப்பது நல்லது. நிதானமாகச் சிந்தித்து அடுத்தது என்ன செய்யவேண்டும் ? விண்ணப்பித்த பாடசாலை கிடைக்கவில்லை என்றால் அடுத்த நல்ல பாடசாலை எது, என்று ஆராய்ந்து அதற்கு தமது பிள்ளைகளை அனுப்புவது நல்லது. குறிப்பாக குறைந்த மதிப்பெண்களை எடுத்த பிள்ளைகளின் மனம் கோணாத வகையில் பெற்றோர் நடப்பது நல்லது. ஏன் எனில் சில விபரீதங்கள் நடக்க வாய்ப்பும் உள்ளது. 

அதிர்வுக்காக: வல்லிபுரத்தான்.

No comments:

Post a Comment