அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த கால அவகாசம் தேவை எனஅரசாங்கம் விடுத்தள்ள கோரிக்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் இலங்கையில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களும் கால அவகாசம் கோரியிருந்த போதிலும், உரிய தீர்வுத் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்கள், காணாமல்போதல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். கைதிகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு உண்மைமையக் கண்டறியும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிகi;கயில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment