வன்னியில் இலங்கை அரச படைகளது ஆழ ஊடுருவும் படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை தம்மிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கேட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் தெரிவி;த்துள்ளார். இன்றைய தினம் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் தலைமையகத்திற்கு திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக கடந்த 28ம் திகதியே விசாரணைக்கு வருமாறான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் எனினும் அது கால தாமதமாக கிடைத்தமையினால் இன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிவனேசன் 2008ம் ஆண்டின் பங்குனி 6ம் திகதி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.அவரது மரணம் நடந்து நான்கு வருடங்களை அண்மித்து வருகின்ற நிலையில் இப்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திட்டமிட்டு சிக்க வைக்கும் ஓர் உத்தியாகவே பார்க்கப்படுகின்றது.
சிவனேசனின் இறுதி கிரியையில் விடுதலைப்புலிகள் அமைப்பி;ன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ஏற்கனவே குடாநாட்டின் முன்னணி வைத்திய அதிகாரியொருவரும் இவ்வாறு குற்றப்புலனாய்வு பொலிஸாரால் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவு பத்மினியை விசாரணைக்கு அழைப்பு
02-03-2012 01:47
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகருமான திருமதி பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவு காவற்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 9.00 மணிக்கு பயங்கரவா த புலனாசூவுப் பிவில் ஆஜராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பத்மினி சிதம்பரநாதனுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் என்ன விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவுள்ளது என்பது தொடர்பில் எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படவில்லை
No comments:
Post a Comment