Translate

Wednesday, 29 February 2012

புலிகள் பெயரில் இலங்கையில் தாக்குதல் நடத்த அரசு திட்டம் !


விடுதலை புலிகளின் பெயரில் இலங்கையின் மிக முக்கிய இராணுவ தளம் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் மீது குண்டு தாக்குதல்களை
நடத்த இலங்கை  அரசு இரகசிய திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது .
உலக நாடுகளின் பலத்த எதிர்ப்புக்களை சந்தித்து வரும் இவ்வேளையில் இவ்விதமான அத்தாக்குதல் ஒன்றை நடத்துவதன் ஊடாக புலிகளின் பயங்கரவாதம் இன்னும் அழியவில்லை எனவும் மீள் கூடிய புலிகள் அணி இவற்றை    நாடத்தி முடித்துள்ளன என முடிச்சு போட்டு இவர்களை வழிநடத்த  உதவியது புலம் பெயரில் உள்ள புலிகளின் அமைப்புகளும்  நாடு கடந்த அரசு என குற்றம் சுமத்தி  உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்குடன் இவை செய்யபடுத்த படவுள்ளனவாம் .
இதனை மையமாக வைத்தே அண்மையில் புலிகளின் பல ஆயுத தொகுதிகள்  வெடிமருந்து வாகனம்கள் கைப்பேற்ற   பட்டுள்ளது என
அரசு அறிவித்திருந்தது .
இந்த தகவலை  பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் வாயிலாக இந்த தகவல் கசிந்துள்ளதாம் !
மகிந்த மாமா தன்னை  காக்க எதையும் செய்யும் நிலையிலேயே தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !

No comments:

Post a Comment