Translate

Friday 2 March 2012

ஐ.நாவில் துள்ளிக்குதித்தது எகிப்த்தும் பாக்கிஸ்தானும் மட்டுமே !

ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இன்று தனது வருடாந்த அறிக்கையை வாசித்தவுடன் சூடு பிடித்தது கருத்துக் கண்மணிகளின் பேச்சுக்கள். அம்மையார் பேசும்போது ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை பற்றி சொல்லி விட்டார். முழுமையாகப் பொறுப்புக் கூறும் கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாகவும் வெடியொன்றை வீசிவிட்டார். தமக்குச் சார்பாக எந்தக் கண்மணி பேசவருமென்று காத்திருந்த தமாரா குணநாயகம் கும்பலுக்கு கை கொடுத்தது எகிப்தும், பாகிஸ்தானும் மட்டுமே.


'அணிசேரா இயக்கம்' என்ற லெட்டர் பாட் கம்பனியின் பிரதிநிதியாகப் பேசிய எகிப்தின் தூதுவர், இலங்கைக்கெதிரான விடயங்கள் தேவையற்றது என்று குத்திக் காட்டினார். 
மக்கள் எழுச்சியினால் ஹோஸ்னி முபாரக் கூண்டில் அடைக்கப்பட்டாலும் , எகிப்தினை இப்போது ஆட்சி புரிவது இராணுவம்தான். இவர் மனித உரிமைக்கு சார்பாக இருப்பாரென்று கனவு காணக்கூடாது. சிறிலங்காவிற்கு ஆதரவாகப் பேச இன்னொருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல. பலுச் இன மக்களின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் பாகிஸ்தானின் பிரதிநிதி.

மகிந்த சமரசிங்காவும், தமாரவும் எடுத்த 'மகிந்த சிந்தனை' வகுப்பினை, சரியாகத்தான் விளங்கிக் கொண்டுள்ளார் என்பது அவர் உரையில் தெரிந்தது. வெளி அழுத்தம் தேவையில்லை. உள்நாட்டுப் பொறிமுறையே போதும் என்றார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாகப் பேசிய டென்மார்க் பிரதிநிதி , நவநீதம்பிள்ளை அம்மையாரின் கருத்தினை ஆதரித்தார்.
இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மகிந்தருக்கு காவடி தூக்கும் இந்தியா, ரஷ்யா,கியூபா பிரதிநிதிகள் பேசும்போது இலங்கையை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. 

துள்ளிக் குதித்தது எகிப்தும் பாகிஸ்தானும் மட்டுமே.

No comments:

Post a Comment