ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதையிட்டு நவனீதம் பிள்ளை பெருமை
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆலோசனை நடாத்துவதையிட்டு பெருமை கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை வெளியிட்டமையை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment