இலங்கையில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் இருவர் தொடர்பாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் தான் முறைப்பாடு செய்யப் போவதாக முந் நாள் மண்ணெண்ணை வியாபாரியும், இந் நாள் ஒட்டுக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய நபர் ஒருவர் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினார். அவர் தனது வகுப்பு வந்த பாடசாலை மாணவி ஒருவருடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினால் அம்மாணவியின் சகோதரர் மேற்படி நிருபரை தாக்கினார். அந்நிருபர் இச்சம்பவத்தை ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையாக காண்பித்தார் என டக்ளஸ் கூறியுள்ளார். மற்றொரு ஊடகவியலாளரை யாழ் மாநகர சபையிலுள்ள உள்ளூராட்சி அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட பகைமை காரணமாக தாக்கியதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர்கள் இருவரும் இலங்கையில் தமக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சுவிட்ஸர்லாந்தில் தஞ்சம் பெற்றுள்ளனர். இது குறித்து நான் முறைப்பாடு செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவர் குறிப்பிடும் இவ்விரு செய்தியாளர்களுமே டக்ளஸைப் பற்றி அதிகம் எழுதுவார்கள் போலும் ! டக்ளஸும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் போலும் !
No comments:
Post a Comment