சிறிலங்காவில் தமக்கு உயிராபத்து இருப்பதாகக் கூறி சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய இரண்டு ஊடகவியலாளர்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தனிப்பட்ட காரணங்களுக்காக, சில தனிநபர்களால் தாக்கப்பட்ட இவர்கள் இருவரும் அதனை சுவிசில் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக ஜெனிவாவில் செய்தியாளர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வகுப்பு ஒன்றை நடத்தியதில் ஏற்பட்ட பிரச்சினையால் தாக்கப்பட்ட யாழ். ஊடகவியலாளர் ஒருவரும், யாழ்.மாநகரசபை உறுப்பினருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பகைமையால் தாக்கப்பட்ட ஊடகவியலாளரும் இந்தச் சம்பவங்களை ஊடகங்களுக்கு எதிரான வன்முறையாக காண்பித்து அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் தமக்கு ஆபத்து இருப்பதாக கூறி சுவிசில் தஞ்சம் பெற்றுள்ள இவர்கள் இருவர் குறித்தும் சுவிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment