Translate

Wednesday, 29 February 2012

சிறீலங்காவிற்கு எதிராக செயற்படுங்கள் ஜெயா மன்மோகன்சிங்கிற்கு கடிதம்


சிறீலங்காவிற்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழகமுதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கையின் இறுதிகட்ட போரின் போது பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்களை இலங்கை படையினரை கொன்று குவித்தது. இதற்கு கண்டனம் தெரவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அப்பாவி மக்கள்கொன்று குவித்ததை கண்டித்து இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.இ மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தங்களை ஆதரிக்கும் என இலங்கை அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மிகவும் கவலை அளிக்கிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இலங்கையின் செயலை இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment