சென்னை, மார்ச்.- 3 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment