இந்நிலையில், இறந்த இப்பெண்ணை பதிவு திருமணம் செயதவரை சந்தேகத்தின் பெயரில் கொள்ளுப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைதானவர் சின்னத்துரை ஞானசந்திரன் எனவும் இவரின் முதல் மனைவியும் முன்று பிள்ளைகளும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் சென்னையில் உள்ள சேத்துப்பட்டி தொடர் மாடியில் தற்கொலை செய்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்துரை ஞானசந்திரன் முன்னால் பிரபல வர்த்தகர் “கல்கி பீடி” சின்னத்துரையின் இளைய மகனாவார்.
இவர் இலங்கையில் கடந்த கால நடை பெற்ற யுத்தத்தின் போது இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு இவர் இராணுவ தளபாடங்கள் மேற்கத்தைய நாடுகளில் இருந்து கொள்வனவில் ஈடுபட்டவர் என்றும் அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் காலம்சென்ற அணுருத்த ரத்வத்தையுடன் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார்.
இதனால், பலகோடிக்கணக்கான இலாபங்ககளை ஈட்டியவர் பண பலத்தால் பெண்களை தான் இன்பத்திக்காக மயக்குவதில் வல்லவர் என்றும் தெரிவந்துள்ளது.
மேலும், படுகொலை செய்யப்பட்ட 47 வயதான சுதர்ஷினி ஷகில கனகசபை, குறித்த நபரை மூன்றாவதாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கொலை செய்யபப்பட்ட இப்பெண், பிரித்தானியாவிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும், அவரின் தாயார் சில நாட்களின் பின் பிரித்தானியா திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவருடையை இரு பிள்ளைகளும் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment