சிறிலங்காவின் சுதந்திரம், இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாட்டுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியங் குவாங்லி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ, பீஜிங் நகரில் சீன பாதுகாப்பு அமைச்சரை நேற்றையதினம் சந்தித்தார்.இருவருக்கும் இடையிலான இச் சந்திப்பின்போதே, லியங் குவாங்லி இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா, சீனாவுடன் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தொடர்பாடலுக்கு நன்றி கூறிய குவாங்லி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவத் தொடர்பாடலை ஏற்படுத்தவும் இருநாட்டு உறவினை மேலும் வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் 55 வருட வரலாற்றைக் கொண்டதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment