Translate

Friday 13 April 2012

சிறிய முகாம்களை அகற்றி நிரந்தர முகாம்களை அமைக்கும் சிறீலங்கா ராணுவம்


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-camparmy%20(2).jpgமாதகலில் கடற்படையினரால் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள சம்பில்துறையிலிருந்து திருவடிநிலை நோக்கியதான கடற்கரையோரப் பகுதிகளில் கடற்படையினர் சீன அரசால் வழங்கப்பட்ட கூடாரங்களைப் பயன்படுத்தி நிரந்தர கடற்படை முகாம்களை தனியார் காணிகளில் அமைத்து வருகின்றனர்.

இந்தக் காணிகளை தமக்கு வழங்க வேண்டும் என்று கடற்படையினர் கோரிக்கை விடுத்தும் மக்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வழங்காததையடுத்து கடற்படையினர் இவ்வாறு நிரந்தர முகாம்களை தமது விருப்பப்படி அமைத்து வருகின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மாதகலில் கடற்படையினரால் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள சம்பில்துறை என்னும் இடத்திலிருந்து திருவடிநிலை கடற்கரையை நோக்கியதான பகுதிகளில் கடற்படையினரின் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

No comments:

Post a Comment