தமிழ்- சிங்கள புத்தாண்டு இன்று பிறக்கின்றது. பிறக்கின்ற புத்தாண்டு சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும் என்பது அனைவரதும் விருப்பம். எனினும் இந்த விருப்பம் முழுமைபெறாமல் போவதன் காரணம் யாது என்பதை ஒரு கணம் சிந்தித்தாக வேண்டும். அந்த சிந்தனை தூய்மையானதாக - பலமான தாக- பக்கம் சாராததாக இருக்குமாயின் வெற்றி களுக்கும் தோல்விக்கும் நாங்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாசாரம் பண்பாடு எத்துணை பெருமைமிக்கதாக இருந்தது என்பதை நாம் சொல் லித் தெரிய வேண்டியதில்லை.ஆனால் அந்த பெருமைக்கு இப்போது என்ன நடந்தாயிற்று? இளைஞர்களுக்கும் பெரிய வர்களுக்குமான இடைவினைத் தொடர்பு தற்போது அறவே இல்லை. இதன் காரணமாக இளைஞர்கள் தங்கள் வயதுக் கோளாறின் வழி நடந்து கொள்கிறார்கள். அதன் முடிபு கலாசாரச் சீரழிவுகள், மன உடைவுகள், தற்கொலை முயற்சி கள், இளம் பெண்களை கடத்துதல், பாலியல் வன் மங்கள், பழிதீர்ப்புகள் என வெறுப்புக்குரிய செயல்கள் சன்னதம் கொண்டுள்ளன.
இத்தகைய மோசமான பிடுங்கல்களை மனங்களில் தாங்கிக்கொண்டு புத்தாண்டு சிறப்புமிக்கதாக அமைய வேண்டு மென நினைப் பதனால்- வாழ்த்துவதனால்- ஆசிப்பதால் எதுவும் நடந்துவிடமாட்டாது. முதலில் எங்களிடம் திருத்தம் ஏற்பட வேண்டும். அந்த திருத்தத்தை செயலில் காட்ட வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண த்து மண்ணின் கலாசாரம், பண்பாடு இளைஞர்களால் கட்டிக் காக்கப்பட்டது. அதேவேளை இளைஞர்களால் கட்டிக்காக் கப்பட்ட கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் சிதைத்து விடுகின்றனர் எனில், அதற்கான காரணம் என்ன? பெற்றோ ர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.
பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களுக்குப் பயந்து பேசாமல் இருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் எதுசெய் தாலும் அது சரி என்ற நினைப்பில் சமூகம் மெளனித்து இருக்கின்றது. இதுவே எங்கள் சமகால போக்கு. நிலைமை இப்படியாக இருக்கையில், எத்தனை ஆண்டு கள் புதுக்கப் புதுக்க பிறந்தாலும் எங்கள் இனத்தைத் தூக்கி நிமிர்த்த முடி யாது. எனவே நாங்களே திருந்துவோம் என இன்று பிறக்கின்ற புத்தாண்டில் பிரகடனம் செய்வோம். பிரகடனம் நிறை வேற்றப்பட்டால் எங்கள் இனத்தின் பெருமை வான் உயர்ந்த புகழை பெற்றுக்கொள்ளும்; இது உறுதி.
---வலம்புரி----
No comments:
Post a Comment