Translate

Friday 13 April 2012

புலித்தேவைக் கட்டிவைத்து நெருப்பால் சூடு வைத்த இலங்கை இராணுவம் !

புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களை இலங்கை இராணுவம் கட்டி வைத்து நெருப்பால் சூடு வைத்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி, சரணடைய விரும்பிய புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை வெள்ளைக்கொடியோடு தம்மிடம் வருமாறு இலங்கை இராணுவம் தெரிவித்தது. ஐ.நா அதிகாரி நம்பியார், இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஆகியோர் அணுசரணை வழங்கிய நிலையில், இவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களோடு காயப்பட்ட போராளிகள் சிலரும் சென்றுள்ளனர். 


விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை இலங்கை இராணுவம், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். புலிகள் இயக்கத் தலைவர் எங்கிருக்கிறார், அவரின் மனைவி மற்றும் மகள் எங்கே இருக்கிறார்கள் எனக் கேள்விகளைக் கேட்டுள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இறுதியாக ஒரு உயரதிகாரி ஒருவரோடு தொலைபேசியூடகத் தொடர்புகொண்ட இராணுவத்தினர், இவர்களை என்ன செய்வது என்று கேட்டுள்ளார். மறு பக்கத்தில் இருந்துவந்த பதிலைத் தெரிந்துகொண்ட ப.நடேசனின் மனைவை எங்களைச் சுடவேண்டாம் எனக் கதறியுள்ளார். இராணுவத்தின் கால்களில் விழுந்து மன்றாடியுள்ளார்.

இருப்பினும் அவரையும் சுட்டு, பின்னர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் ப.நடேசன் அவர்களை இராணுவம் கொண்றுள்ளது. அதன் பின்னரே புலித்தேவன் கொல்லப்பட்டுள்ளார். தீயினால் சுட்டும், எரிபொருள் திரவங்களை உடலில் தடவி உயிருடம் எரியூட்டி பின்னர் அதனை அணைத்துவிட்டு கேள்வி கேட்ப்பதும், சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் பின்னர் எரியூட்டுவதுமாக, புலித்தேவன் அவர்களை உயிருடன் வைத்துக் கொல்லாமல் கொண்றுள்ளனர் இராணுவத்தினர். 

இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கிருந்து உயிருடன் தப்பிவந்த போராளி ஒருவரின் குறிப்புகளும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.



No comments:

Post a Comment