சோதிட ரீதியாக மேட ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கின உதயம், வருடம் பிறக்கிறது, இது சூரிய குடும்ப சுற்றின் கிர நிலைப்படியான காலக்கணிப்பு. சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் கருத்துவேறுபாடு இருந்தாலும், இதை அதற்குரியவர்கள் தீர்மானிக்க முயலவேண்டும். இது அவர்கள் வேலை.
சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அஸ்வினி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. இது சூரிய கிரகத்தின் மேஷ ராசி வருகை என வர்ணிக்கப்படுகிறது, இது சோதிடத்தில் முதல் ராசி மேஷத்தில் முதல் நட்சத்திரம் அஸ்வினியில் சூரியன் வரும் நாள். 60 வருடங்களைக் கொண்ட சுற்றில் நந்தன வருடமாக வருகிறது.
நந்தன என்றால் வாரிசு எனப்பொருள்படும். சிறீ ராமரை ரகுநந்தனன் என்பதுண்டு, கண்ணனையே யது நந்தனன் என்பதுண்டு. சைவசமயமும், சோதிடமும் கலந்து அந்தகாலம், அதுவே பல விடயங்களில் சோதிடம் சைவசமயத்துடன் பிணைந்திருக்கிறது. மொழியையும், சமயத்தையும் காப்பதற்காக சோதிடமும் கடமையாற்றியிருக்கிறது. இதை மாற்ற அரசாங்கம் முயல்வதானால் அதை இது சார்பான அறிஞர்களின் ஆராட்சிமூலம் மட்டும் தான் சரியாக மாற்றமுடியும், முன்னோர்களின் வார்தைகள் கணிப்புகள், சரியானதே, இதை தான் யப்பான் நாடு கடந்த வருடம் சந்தித்த சுணாமி அழிவின் பின்னர், முன்னோர்கள் எழுதிய கல்வெட்டில் அணு உலை இருந்த பகுதிகளை இப்பகுதி ஆபத்தான் பகுதி என குறிப்பிட்டு இருந்ததை அறிந்தார்கள்.
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல நமக்கது பண்பாடு என கவிஞர் கூறியதுபோல், முன்னோர்கள், அறிவாளிகள், அஞ்ஞானத்தால் விஞ்ஞானத்தைக் கணித்தவர்கள், அவர்கள் பொன்னான வார்த்தைகளை, அறிவுரைகளை மதியுங்கள், மனதில் பதியுங்கள்!
இந்த புதுவருடத்தில் உங்களை வாழ்த்தவரவில்லை எச்சரிக்கவிரும்புகின்றேன். இரக்கமில்லாத மனிதர்களே, நீங்கள் அழிந்து போங்கள்!
எமது முன்னோர்கள், ஆண்ட தமிழ் மன்னர்கள் எவ்வளவு சேவை தமிழுக்காகச் செய்திருக்கிறார்கள், ஆனால் எதிர்காலத்தை சிந்திக்கவில்லை, தங்களுக்குள்ளே விரோதமாக அடிபட்டு, பகைகொண்டு, காட்டிக் கொடுத்து அழிந்து போனார்கள், இதனால் என்ன பயன்! 2012 இந்த காலச்சக்கர ஒரு வருடத்தில், உலகம் தன்னையே உலுப்பி மக்களை கிலிசெய்யப்போகிறது.
உலகத்தில் 12 தட்டுகளில் 11ம் திகதி சித்திரை 2012ல் அசைந்த இந்தோனேசிய தட்டில் அசைவு மேல் நோக்கியதாக அமையாததால் சுணாமி வராது தப்பிப்பிழைத்துவிட்டார்கள் மக்கள், ஆனால், இரு தட்டின் முன்பகுதி மேல்நோக்கியதாக மாறினால் நீர் வெளியேற்றத்தால், உந்தப்பட்டு நீர் வேகத்தோடு செல்லும்போது சுனாமியாக மாறுகிறது. ஆனால், பூமி அதிர்வு இடம் பெற்ற இடத்தில் எரிமலை பிளம்புகள் வெளியேறியிருந்தால் முன்னர் நடந்த நிலை நடந்திருக்கும் அதைவிட, முன்னர் நீர் உள் இழுக்கப்பட்டு கறுப்பாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது, காரணம் நெருப்பு பிளம்புகள் வெளியேறிதால் அவ்வாறு நடந்தது,
தட்டு சொங்குத்தாக நகராதது இதற்கான காரணமாகும். அன்று பௌரமியாக இருந்திருந்தால் கதை வேறாக அமைந்திருக்கும், 2004 சுணாமி ஏற்பட்டது பௌரமியில் என்பது குறிப்பிடத்தக்கது, சந்திரனின் தாக்கம் கடல் அலைகளை, மக்கள், மிருகங்களின் உணர்வை மாற்றமடைய செய்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இது பற்றி நான் சொல்ல வருவது என்னவென்றால்! உலக மக்கள், அரசியல்வாதிகள் அன்பைவிட்டு, அகந்தை கொண்டுவிட்டார்கள், பெறாமை கொண்டு விட்டார்கள், மற்றவர்களை மதிப்பதை மறந்துவிட்டார்கள். இதனால் பூமி அழிவை இவ்வாண்டு தரத்தான் போகிறது, தண்டிக்கதான் போகிறது. இயற்கை தண்டிக்கட்டும். இதற்காவது மனிதர் பயப்பிடட்டும். மனித நேயம் அற்ற உலகமக்களாக மாறிவிட்டதால் இயற்கை மனிதனை தண்டிக்கட்டும்! அழிக்கட்டும், இறைவன் நீரால் அழித்தது போல், இறைவன் இனி அழிப்பது இதுவா அதுவா என மக்கள் சிந்திக்கவைக்கட்டும்!
பூமி நடுக்கமா, பெருமழையா, இடிமின்னலா, எரிமலையா, அணுமின்நிலைய கதிர்வீச்சா, காற்றா, படகுவிபத்தா! அழிவுகள் பலவிதமாக வரும், காரணம் மனிதன் மனிதனாக இல்லை! மனிதனின் மனம் மாறுவதாக இல்லை! பணம் என்ற ஆசை, புகழ் என்ற ஆசை, சுயநலமான மனிதன் வாழ்வதிலும் அழியலாம்.
தன் இனம், தமிழ் இனம் அழிந்தது, அதை உணர்ந்தாவது செயல்படுவோம் என எண்ணாது வாழும் தமிழன் சாகட்டும், வாழவைக்காகதவன், மற்றவர்களுக்காக வாழாதவன் சாகட்டும், சாவுக்கு பயந்தவர்கள் சாகட்டும். மற்றவர்களுக்காக, மக்களுக்காக சாகத்துணிபவர்கள், சுமை சுமக்கத் துணிந்தவர்கள் சாவுக்கு பயப்பிடமாட்டார்கள், அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள், பணத்தால் அவர்களை வாங்கமுடியாது, இனத்திற்காக, அன்பிற்காக உயிர் கொடுக்கும் நீதிமான்கள் அவர்கள், சிவிச்சக்கரவர்த்தி, பெரும் சேரன் இரும்பறை, நீதிச்சோழ மன்னன், பாரிவள்ளல் போன்றோர்கள் போல் மக்களுக்காகவும், நீதிக்காவும், அன்பிற்காகவும் வாழும் மனிதன் இன்று எங்கே!
எமக்கு யாருமில்லையே உதவி செய்ய என தீக்குழித்தும், ஊர்வலம் சென்றும் வழி கிடையாது இருக்க, இப்போ அமெரிக்கா மற்றும் ஜரோப்பியநாடுகள் எம்மை திரும்பி பார்க்கும் நிலை வரும் போது, இரண்டு படும் எமது தமிழ் இனத்தை நினைத்து வெட்கப்படுகின்றேன்.
இரக்கமில்லாதவன் தமிழன், இனத்தில், நாட்டில் அன்பில்லாதவன் தமிழன், பற்று அற்றவன் தமிழன் என திட்டத்தோணுகிறது. பணம் சேர்க்கத்துடிப்பவன், பணத்துக்காக வாழத்துடிப்பவன், பிணமாக போக நேர்ந்தால் எதைக் கொண்டு போவான். பணம் வேண்டும் தான் ஆனால், உன் இனம் வேண்டும் முதல், உறவு வேண்டும் முதல், நாடுவேண்டும் முதல், அதன் பின் பணத்தை தேடு, நீ உனக்காக வாழு, ஆனால் மற்றவனை, உன் இனத்தை காட்டிக் கொடுத்து, பெலமிழக்க செய்து, யுதாஸ் கரியோத்து போல் நீ சாவதில் என்ன பயன்!
தமிழர் நாம் இன்று ஒன்று சேர்ந்தால் வென்றுவிடலாம் ஆனால் அதைப்பற்றி அக்கறையில்லை, தங்கள் அமைப்புக்களை விளம்பரப்படுத்துவதில், முன்னிலைப்படுத்துவதில் மட்டும் தான் முன் நிற்கிறார்கள், ஒன்று பட்டு வென்றுவிட நினைப்பவன் யாருமில்லையா!
இறைவன் ஆணையால் உலகம் எம்பக்கம் திரும்புகிறது,
இயற்கை குமுற இடிமின்னல் தாக்க, வான்படைகளும்,
கலால் படைகளும் இருட்டில் மூழ்க,
இருண்ட உலகத்தை இருண்ட மனிதர்கள் காணும் போது இரக்கமுள்ள இறைவன் கூட இரங்கமாட்டார்,
இரவோடு இரவாக அழித்துவிடுவார். இனி வரும் காலம் அதுவாகவே இருக்கும்!
அதர்மம் அழியும், தர்மம் வென்றோயாகும்!
இறப்பதற்கு பயப்பிடுங்கள், அல்லது இறைவனுக்கு பயப்பிடுங்கள்,
இரக்கமாவது இதயத்தில் இருக்கட்டுமே இன்பமாக
மற்றவனும் வாழ மனமில்லாத அரக்கர்கள் அழிவதற்கான,
இயம காலம் இதுவாகவே இருக்கட்டும் இரண்டாயிரத்தி பண்ணிரண்டு இரக்கமற்றவர்களின் அழிவின் ஆண்டாக திகழட்டும்.
எமது இனத்தை காக்க வாருங்கள் ஒன்று படுங்கள் அல்லது அழிந்து போங்கள்!
இறைவன் உங்களைத் தண்டிக்கட்டும்!
இது யேசுவின் மலைப்பொழிவு வசனங்களாக அமையட்டும்!
அருள் தெய்வேந்திரன் அருள் சோதிடர் – சுவிஸ்
No comments:
Post a Comment