தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், இலங்கை அரசை போல் விடுதலை புலிகளும் போர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று மத்திய அரசின் நிலைபாட்டை முன் வைத்தார்.
நேதாஜி, பகத்சிங் உள்ளிட்டோர் சுதந்திர போராட்டத்திற்காக வன்முறையில் ஈடுபட்டது தீவிரவாதம் ஆகுமா என விடுதலைப் புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை மறு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு கடந்த 1992 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க கோரி கடந்த 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மத்திய தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து வைகோ மற்றும் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment