Translate

Thursday, 12 April 2012

சிறிலங்காப் படையினரே கடத்தினர், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்தனர் – சிட்னியில் குணரட்ணம் செவ்வி

கடத்தி வைத்திருந்த சிறிலங்காப் படையினர் தன்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சிட்னியின் வடக்கில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 


“கடத்தப்பட்டு மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, எனது கைகளும், கண்களும் கட்டப்பட்டிருந்தன. 

உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். 

அவுஸ்ரேலிய அரசாங்கம் எனக்கு ஆதரவு காட்டியிருக்கா விட்டால், எனது சகோதரர் மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களைப் போலவே நானும் கொலை செய்யப்பட்டிருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. 

சிறிலங்கா அரசபடைகளாலேயே நான் கடத்தப்பட்டேன் என்று என்பதை உறுதியாக கூறமுடியும். 

அவர்கள் எனது கண்களைக் கட்டி விட்டு சித்திரவதை செய்தார்கள். 

பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். இதைச் சொல்வதற்கு எனக்கு தர்மசங்கடமாக உள்ளது. 

எல்லோரும் சிறிலங்காவில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்களை புறக்கணித்தால், ராஜபக்சவின் ஆட்சியின் கடத்தல்கள், கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். 

சுதந்திரமாக சிந்திக்கும் உலகம் இந்த மனிதஉரிமை மீறல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்“ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment