ஐ.நா., ஏப்.12 - தமிழ் ்ஈழம் குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற புதிய யோசனை ஐ.நா. சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட இதேபோன்ற வாக்கெடுப்புகளே தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ ஆகிய நாடுகள் தனி நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு காரணமாக அமைந்தன.அதே போல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சில ஆலோசனைகள் துவங்கியுள்ளன. அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment