Translate

Thursday 12 April 2012

இந்திய எம்.பி. க்கள் குழுவின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது _


  இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 


புலம்பெயர் மக்களின் இனவாத பிரிவினர் கூறும் பொய்யான கூற்றுக்களை தவிர்த்து இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று இந்திய எம்.பி.க்களினால் புரிந்துகொள்ள இந்த விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் மனிதப்பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். _

No comments:

Post a Comment