முன்னாள் பிரதமருக்கு தான் இலங்கையர் என்று சொல்லவே வெட்கமாக உள்ளதாம் |
நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக இலங்கையர் என்ற ரீதியில் நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களுக்காக தான் வெட்கப்படுவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிரியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்காக இலங்கையர் என்ற ரீதியில் வெட்கப்படுகின்றேன்.”
தற்போது எமது நாட்டில் “மனிதர்கள் சுதந்திரமாக வீதியில் நடமாட முடியவில்லை, சட்டவிரேதமான முறையில் கடத்திச் செல்லப்படுகின்றனர்.
ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை யார் செய்கின்றார்கள் இதற்கான பின்னணி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் நமது நாட்டில் நடைபெறுகின்ற இவ்வாறான சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
“நாம் வீதியில் செல்லும் போது யாரேனும் எம்மை கடத்திச் சென்றால் அது எமது சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகும். அவ்வாறான சம்பவங்களை தடுப்பது நாம் அனைவரினதும் கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசுடன் இணைந்து முன்னாள் பிரதமர் நாட்டின் நலனுக்காக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 12 April 2012
முன்னாள் பிரதமருக்கு தான் இலங்கையர் என்று சொல்லவே வெட்கமாக உள்ளதாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment