
விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
குணரட்ணம் மற்றும் திமுத்து ஆட்டிக ஆகியோரை அரசு கடத்துவதற்கான காரணம்
எதுவுமே கிடையாது என்று கூறியிருந்தார்.பொலிஸ் தரப்புப் பேச்சாளர் அஜித்
ரோஹண, குணரட்ணம் இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டு மட்டகொடவுக்கு கொண்டு
செல்லப்பட்டுப் பின்னர் பொலிஸ் குற்றப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார்
என்று கூறினார்.
இந்தக் கடத்தலில் அரசு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாக்கியுள்ளது.
அரசு ஆள்கடத்தல் கைத் தொழிலில் ஈடுபட்டள்ளது என்பதை இந்தச் சம்பவங்கள்
தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சமீப காலத்தில் நடந்துள்ள
ஆள்கடத்தல்களின் எண்ணிக்கை 60 ஆக அறிவித்துள்ளது.கோத்தபாய ராஜபக்ஷ
பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை இவ்வாறான ஆள்கடத்தல்கள் தொடர்பாக
நம்பகரமான விசாரணைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசின் ஆள் கடத்தும் "கைத்தொழிலின்'' மிக அசிங்கமான ஓர் அம்சம் .
ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ மிக உயர்ந்த பதவியில் இருப்பது மட்டுமல்ல
ஜநாதிபதியின் சகோதரராக இருப்பதால் அவ்வாறான விசாரணை ஒன்று நடப்பது
சாத்தியமில்லை என்று கூற வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்றுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு
ஜநாதிபதியின் சகோதரராக இருப்பதால் அவ்வாறான விசாரணை ஒன்று நடப்பது
சாத்தியமில்லை என்று கூற வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்றுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு
No comments:
Post a Comment